தமிழக செய்திகள்

சார்லப்பள்ளி - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்

சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது.

திருச்சி,

ஆயுதபூஜை பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சார்லப்பள்ளி -நாகர்கோவில் இடையே திருச்சி வழியாக சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி, சார்லப்பள்ளி நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07535) வருகிற 25 மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 2, 9, 16, 23-ந்தேதிகளில் (வெள்ளிக்கிழமை) சார்லப்பள்ளியில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இந்த ரெயிலானது திருச்சி ஜங்ஷனுக்கு மதியம் 3.25 மணிக்கு வந்து 3.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் சார்லப்பள்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07536) வருகிற 27-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவிலில் இருந்து நள்ளிரவு 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சார்லப்பள்ளி சென்றடையும். இந்த ரெயிலானது திருச்சிக்கு காலை 6.35 மணிக்கு வந்து 6.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

SCROLL FOR NEXT