சென்னை,
மும்பை - சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மும்பையில் இருந்து வருகிற 21, 28, நவம்பர் 4, 11, 18 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண். 01015) அடுத்தநாள் இரவு 11.30 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.
மறுமார்க்கமாக, சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 22, 29, நவம்பர் 5, 12, 19 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (01016), மறுநாள் அதிகாலை 4.05 மணிக்கு மும்பை சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.