தமிழக செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்னை சென்டிரல் - மதுரை இடையே சிறப்பு ரெயில்

சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு ரெயில்கள்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.06153), மறுநாள் காலை 4.30 மணிக்கு மதுரை சென்றடையும்.

மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06154), மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்தடையும்.

அதேபோல, தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில் (06157), மறுநாள் காலை 5 மணிக்கு மதுரை சென்றடையும்.

மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06158), மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

கடற்கரை-மானாமதுரை

சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (06161), இரவு 11.30 மணிக்கு மானாமதுரை சென்றடையும்.

மறுமார்க்கமாக, மானாமதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி மதியம் 12 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில் (06162), இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT