தமிழக செய்திகள்

சென்னை சென்டிரல்-போத்தனூர் இடையே சிறப்பு ரெயில்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

திருப்பூர்,

விநாயகர் சதுர்த்தி வருகிற 14-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருப்பூர் வழியாக சென்னை சென்டிரல்-போத்தனூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி. சென்னை சென்டிரல்-போத்தனூர் (வண்டி எண்.06023) சிறப்பு ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை சென்டிரலில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

இந்த ரெயில் திருப்பூருக்கு காலை 6.58 மணிக்கு வந்து 7 மணிக்கு புறப்படும். போத்தனூர்-சென்னை சென்டிரல் (06024) சிறப்பு ரெயில் வருகிற 14-ந்தேதி போத்தனூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.25 மணிக்கு சென்னை சென்டிரலை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு நள்ளிரவு 12.08 மணிக்கு வந்து 12.10 மணிக்கு புறப்படும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT