சேலம்,
பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பீகார் மாநிலம் தர்பங்கா சந்திப்பில் இருந்து கோவை போத்தனூர் சந்திப்பு வரை ஒருவழி சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, (ரெயில் எண்: 05591) தர்பங்கா-போத்தனூர் சிறப்பு ரெயில் நாளை (புதன்கிழமை) காலை 7.05 மணிக்கு தர்பங்காவில் இருந்து புறப்பட்டு விஜயவாடா, பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 20-ந் தேதி காலை 11.30 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் 11.35 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக பிற்பகல் 3.30 மணிக்கு போத்தனூர் சென்றடைகிறது. இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.