திருப்பூர்,
பயணிகளின் வசதிக்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் பருணிக்கு சிறப்பு ரெயில் திருப்பூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில் எர்ணாகுளத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு நிலையில், 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணிக்கு பரு ணிக்கு சென்றடையும். நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.20 மணிக்கு போத்தனூருக்கும், 5.10 மணிக்கு திருப்பூருக்கும், 6 மணிக்கு ஈரோட்டுக்கும், 7 மணிக்கு சேலத்துக்கும் செல்லும்.
அதேபோல், பருணியில் இருந்து வருகிற 30-ந் தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் வருகிற 2-ந்தேதி (புதன்கிழமை) இரவு 11 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரெயில் வருகிற 2-ந் தேதி மதியம் 2 மணிக்கு சேலத்துக்கும், 3.10 மணிக்கு ஈரோட்டுக்கும், மாலை 4 மணிக்கு திருப்பூருக்கும், 5.13 மணிக்கு போத்தனூருக்கும் சென்றடையும். இந்த தகவலை, ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.