தமிழக செய்திகள்

எர்ணாகுளம்-பீகார் இடையே சேலம் வழியாக சிறப்பு ரெயில்

எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் கயாவிற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

திருப்பூர்,

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பாதுகாப்பை கருத்தில் கொண்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலம் கயாவிற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, எர்ணாகுளம்-கயா (வண்டி எண்.06091) சிறப்பு ரெயில் ' இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 11.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு கயாவிற்கு சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு அதிகாலை 5.10 மணிக்கு வந்து 5.15 மணிக்கு புறப்படும். மேற்கண்ட தகவலை, ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT