சென்னை,
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, எர்ணாகுளம் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06056) மறுநாள் மதியம் 12 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 1-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06055) மறுநாள் காலை 4.30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில், அலுவா, திரிச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (27-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.