சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் சென்டிரலில் இருந்து வருகிற 5,12,19,26 ஆகிய தேதிகளில் காலை 8.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.01925), காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 7.15 மணிக்கு மதுரை வந்தடையும்.
மறுமார்க்கமாக, மதுரையில் இருந்து வருகிற 8,15,22,29 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (01926), மேற்கண்ட வழித்தடம் வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 4.30 மணிக்கு கான்பூர் சென்டிரல் சென்றடையும்.