நெல்லை,
ஆயுத பூஜை விடுமுறை நாட்களையொட்டி தென் மத்திய ரெயில்வே சார்பில் பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சார்லபள்ளியில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சார்லபள்ளி -நாகர்கோவில் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07535) வருகிற 25-ந்தேதி, அக்டோபர் 2, 9, 16, 23-ந்தேதி ஆகிய வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் இரவு 8.40 மணிக்கு நெல்லை வந்து, நாகர்கோவிலுக்கு 9.45 மணிக்கு சென்றடை கிறது.
மறுமார்க்கத்தில் நாகர்கோவில் சார்லபள்ளி சிறப்பு ரெயில் (வண்டி எண் 07536) வருகிற 27-ந்தேதி, அக்டோபர் 4, 11, 18, 25-ந்தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமை நாகர்கோவிலில் இருந்து அதிகாலை 12.45 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் நெல்லைக்கு அதிகாலை 2.05 மணிக்கு வந்து, மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு சார்லபள்ளி சென்றடைகிறது.