தமிழக செய்திகள்

தாம்பரம்-போத்தனூர் இடையே சிறப்பு ரெயில்

சேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சேலம்,

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ரெயில்வே நிர்வாகம் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில், தாம்பரத்தில் இருந்து சேலம் வழியாக போத்தனூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, தாம்ப ரம்-போத்தனூர் சிறப்பு ரெயில் (06025) இன்று (வெள்ளிக்கிழமை) தாம்பரத் தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும்.

இந்த ரெயில் சென்னை எழும் பூர், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 5 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர், சேலத் தில் இருந்து காலை 5.03 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக காலை 9 மணிக்கு போத்தனூர் சென்றடையும். இத்தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT