தமிழக செய்திகள்

திருவனந்தபுரம்-மேற்கு வங்கம் இடையே போத்தனூர் வழியாக சிறப்பு ரெயில்

சந்தராகாட்சி-திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு ரெயில் புதன்கிழமைகளில் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

கோவை,

கேரளம் மாநிலம் திருவனந்தபுரம்-மேற்கு வங்கம் சந்தராகாட்சி இடையே போத்தனூர் வழித்த டத்தில் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சிறப்பு ரெயில்

அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வாரத்தில் வெள்ளிக்கிழமைகளில் திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம்-சந்தராகாட்சி வாராந்திர ரெயில் (எண்: 06081) ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1.45 மணிக்கு சந்தராகாட்சி நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக அடுத்த மாதம் 5-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 2-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் சந்தராகாட்சியில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் சந்தராகாட்சி-திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு ரெயில் (எண்: 06082) புதன்கிழமைகளில் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

ரெயில் நிலையங்கள்

இந்த ரெயில் கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங் கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, கட்டாக், காரக்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT