தூத்துக்குடி,
மத்திய ரெயில்வே மண்டலம் சார்பில் தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக மும்பையில் இருந்து பெங்களூரு, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சிறப்பு ரெயில் (வ.எண்.01005) மும்பையில் இருந்து வருகிற 21-ந் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 2-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 7.55 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. நண்பகல் 11.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.01006) தூத்துக்குடியில் இருந்து வருகிற 22-ந் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி வரை புதன்கிழமைகளில் மாலை 3.30 மணிக்கு புறப்படுகிறது. மாலை 5.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. வெள்ளிக்கிழமை அதி காலை 6 மணிக்கு மும்பை சி.எஸ்.டி. ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில்கள் இருமார்க்கங்களிலும், தாதர், தானே, கல்யாண், லோனா வாலா, பூனா, தவுந்த், குர்துவாடி, சோலாப்பூர், கலாபுர்கி, வாடி, யத்கிர், கிருஷ்ணா, ராய்ச்சூர், மந்திராலயம் ரோடு, குண்டக்கல், அனந்தபூர், தர்மா வரம், எலஹங்கா, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில் பட்டி, தூத்துக்குடி மேலூர் (2-ம் கேட்) ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ரெயிலில், ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 6 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.