சிறப்பு ரெயில் 
தமிழக செய்திகள்

சென்னையில் இருந்து மங்களூருவுக்கு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில்

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை,

சென்னை எழும்பூரில் இருந்து மங்களூருவுக்கு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக நாளை (அக்.17) சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

எழும்பூரில் இருந்து

சென்னை எழும்பூரில் இருந்து நாளை (அக்.17) இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06036) மறுநாள் இரவு 7.45 மணிக்கு மங்களூரு சென்டிரலை சென்றடைகிறது.

சிறப்பு ரெயில்

22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (அக்.17) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT