கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

தூத்துக்குடி,

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் சென்டிரலில் இருந்து வருகிற 13-ந்தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06151) மறுநாள் மதியம் 12.15 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. தூத்துக்குடியில் இருந்து வருகிற 14-ந்தேதி மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06152) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னையை சென்றடைகிறது.

இந்த ரெயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் 2 ஈரடுக்கு படுக்கை வசதி கொண்ட ஏ.சி பெட்டிகளும், 5 மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட ஏ.சி பெட்டிகளும், 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 4 பொதுப்பெட்டிகளும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளும் இணைக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டுள்ளது.