சென்னை,
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க ஈரோட்டில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள உத்னாவுக்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈரோட்டில் இருந்து நாளை (செப்டம்பர் 30, புதன்கிழமை) காலை 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06197) மறுநாள் இரவு 10 மணிக்கு குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள உத்னாவை சென்றடைகிறது.
20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில் திருப்பூர், போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.