கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரெயில்

சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க, நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

நாகர்கோவிலில் இருந்து வரும் 31-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06196) அன்று இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.

20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (30-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.