தமிழக செய்திகள்

நாகர்கோவில்-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கம்

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.45 மணிக்கு எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06196) இயக்கப்படுகிறது.

சென்னை

கோடை கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து, சொந்த ஊருக்கு மக்கள் செல்வது வழக்கம். இதன்படி, பல்வேறு பகுதிகளில் உள்ள ஊருக்கு சென்று விட்டு சென்னை திரும்பக்கூடிய பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து எழும்பூர் வரை சிறப்பு ரெயில் ஒன்றை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

இதுபற்றி தெற்கு ரெயில்வே சார்பில் வெளியாகி உள்ள செய்திக்குறிப்பில், பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, நாகர்கோவிலில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.45 மணிக்கு எழும்பூருக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06196) இயக்கப்படுகிறது. இதனை பயணிகள் பயன்படுத்தி கொள்ளும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.