தமிழக செய்திகள்

சென்னை - சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

கோடைக்காலத்தில் ஏற்படும் கூடுதல் பயணிகள் கூட்டத்தைக் கையாளும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

சென்னை சென்டிரல் - மேற்கு வங்காள மாநில ஹவுரா அருகே உள்ள சந்திரகாச்சி இடையே கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை சென்டிரலில் இருந்து நாளை 16-ந் தேதி,(வியாழக்கிழமை) காலை 6.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06067) மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், சந்திரகாச்சியில் இருந்து நாளை மறுநாள் 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06068), அடுத்த நாள் மாலை 6.30 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடைகிறது. இந்த சிறப்பு ரெயிலில் 18 தூங்கும் வசதி பெட்டிகளும், 2 இரண்டாவது வகுப்பு பெட்டிகளும், 1 ஏசி இரண்டு வகுப்பு பெட்டியும், 1 ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டியும், இணைக்கப்பட்டிருக்கும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.