சென்னை,
சென்னை சென்டிரல் - மேற்கு வங்காள மாநில ஹவுரா அருகே உள்ள சந்திரகாச்சி இடையே கோடை கால சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து 19-ந் தேதி, (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06001) மறுநாள் மாலை 6.30 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், சந்திரகாச்சியில் இருந்து 20-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06002), மூன்றாம் நாள் காலை 8.30 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடைகிறது. இந்த சிறப்பு ரெயிலில் 12 தூங்கும் வசதி பெட்டிகளும், 2 இரண்டாவது வகுப்பு பெட்டிகளும், 1 ஏசி இரண்டு வகுப்பு பெட்டியும், 1 ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டியும், இணைக்கப்பட்டிருக்கும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.