தமிழக செய்திகள்

சென்னை சென்டிரல் - போத்தனூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

கோடைக்காலத்தில் ஏற்படும் கூடுதல் பயணிகள் கூட்டத்தைக் கையாளும் வகையில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

சென்னை சென்டிரலில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06023), வருகிற ஏப்ரல் 22ம் தேதி (புதன்கிழமை) சென்னை சென்டிரலில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், போத்தனூரில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06024) வருகிற ஏப்ரல் 23ம் தேதி (வியாழக்கிழமை) போத்தனூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்டிரல் வந்து சேரும்.

அதேபோல், சென்னை சென்டிரலில் இருந்து போத்தனூர் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06027), வருகிற ஏப்ரல் 21,22,25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரலில் இருந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 4 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், போத்தனூரில் இருந்து சென்னை சென்டிரல் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06024) வருகிற ஏப்ரல் 21,22,25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் மாலை 5 மணிக்கு போத்தனூர் சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.