திருப்பூர்,
திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எர்ணாகுளம்-பாட்னா இடையே வாராந் திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, எர்ணாகுளம்-பாட்னா (வண்டி எண்.06085) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 2-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமைகளில் அதிகாலை 3.30 மணிக்கு பாட்னாவை சென்றடையும்.
இந்த ரெயில் திருப்பூருக்கு சனிக்கிழமைகளில் அதிகாலை 3 மணிக்கு வந்து 3.05 மணிக்கு புறப்படும்.
பாட்னா-எர்ணாகுளம் (06086) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 6-ந்தேதி முதல் நவம்பர் 3-ந்தேதி வரை செவ்வாய்க் கிழமைகளில் நள்ளிரவு 12.10 மணிக்கு பாட்னாவில் இருந்து புறப்பட்டு வியாழக் கிழமைகளில் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.
இந்த ரெயில் திருப்பூருக்கு வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 1.25 மணிக்கு வந்து 1.30 மணிக்கு புறப்படும். மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.