தமிழக செய்திகள்

கேரளம் - தெலுங்கானா இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக கோட்டயம்-சார்லபள்ளி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து வருகிற 23,30 ஆகிய தேதிகளில் காலை 7.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07197), காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் மதியம் 12.25 மணிக்கு கேரள மாநிலம் கோட்டயம் சென்றடையும். மறுமார்க்கமாக, கோட்டயத்தில் இருந்து வருகிற 24, 31 ஆகிய தேதிகளில் மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07198), மேற்கண்ட வழித்தடம் வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் நள்ளிரவு 12.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.