சென்னை,
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் - ஈரோடு இடையேயான சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சம்பல்பூரில் இருந்து புதன்கிழமைகளில் காலை 11.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 10.50 மணிக்கு ஈரோட்டை வந்தடையும். இந்த ரெயில் சேவை, ஜூலை 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் நீட்டிக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில், ஈரோட்டில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூரை சென்றடையும். இந்த ரெயில் சேவை ஜூலை 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் நீட்டிக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.