திருப்பூர்,
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சார்லப்பள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூர் வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
”அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 4-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில், சார்லப்பள்ளியில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்படும் சார்லப்பள்ளி கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரெயில் (எண்: 07195) சனிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறுமார்க்கமாக அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை சனிக்கிழமைகளில், கொல்லத்தில் இருந்து மாலை 5.20 மணிக்கு புறப்படும் கொல்லம் - சார்லப்பள்ளி வாராந்திர சிறப்பு ரெயில் (எண்: 07196) திங்கட்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு சார்லப்பள்ளி நிலையத்தை சென்றடையும்.
இந்த ரெயில் கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூர், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், பாப்ட்லா, தெனாலி, குண்டூர், நால்கொண்டா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.