மதுரை,
பழனியில் நடைபெறும் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மதுரை-பழனி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
மதுரை சந்திப்பு பழனி முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரெயில் 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 6 மணிக்கு மதுரை சந்திப்பிலிருந்து புறப்பட்டு அதே நாளில் காலை 8.30 மணிக்கு பழனிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக பழனி - மதுரை சந்திப்பு முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரெயில் 1.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பிற்பகல் 2.25 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு அதே நாளில் மாலை 5 மணிக்கு மதுரை சந்திப்பை வந்தடையும்.
இந்த ரெயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் சாலை, அம்பதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.