தமிழக செய்திகள்

தாம்பரம் - போத்தனூர் இடையே நாளை சிறப்பு ரெயில் இயக்கம்

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை,

வார இறுதி நாட்களில் பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், தாம்பரத்தில் இருந்து போத்தனூருக்கு ஒருவழி சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

தாம்பரம் - போத்தனூர்

தாம்பரம் - போத்தனூர் ஒன் வே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (ரெயில் எண் 06025) , வரும் செப்டம்பர் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். இந்த ரெயில் மறுநாள் செப்டம்பர் 26-ம் தேதி காலை 9 மணிக்கு போத்தனூரை சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயில் ஒரு சேவை மட்டுமே இயக்கப்படுகிறது.

வார இறுதி பயணிகளின் கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

SCROLL FOR NEXT