சேலம்,
சபரிமலை சீசனையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னை-கொல்லம் இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர்-கொல்லம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06121) இன்று (சனிக்கிழமை) முதல் ஜனவரி மாதம் 23-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5.03 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
இதேபோல், கொல்லம்-சென்னை சென்டிரல் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06122) நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜனவரி மாதம் 24-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.57 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 5 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக காலை 11.40 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.