சேலம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி விரதம் இருந்து வரத்தொடங்கி உள்ளனர். இதையடுத்து பக்தர்கள் கூட்டம் ரெயிலில் அதிகரித்து வருவதையொட்டி சிறப்பு ரெயில்களை கொல்லத்திற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், தெலுங்கானா மாநிலம் சாரளப்பள்ளியில் இருந்து ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக கொல்லத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சாரளப்பள்ளி கொல்லம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07185) இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.45 மணிக்கு சாரளப்பள்ளியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 8.10 மணிக்கு சேலம் வருகிறது. இங்கிருந்து இரவு 8.13 மணிக்கு புறப்பட்டு ஈரோடு. திருப்பூர். போத்தனூர் வழியாக மறுநாள் காலை 7.55 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், கொல்லம்-சாரளப்பள்ளி சிறப்பு ரெயில் (வண்டி எண்-07186) நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10.55 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு. போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக இரவு 9.27 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக மறுநாள் இரவு 7 மணிக்கு சாரளப்பள்ளி சென்றடை யும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.