தமிழக செய்திகள்

மும்பை-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

பண்டிகை காலங்களை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மும்பை,

நாடு முழுவதும் அடுத்த மாதம் முதல் தசரா, தீபாவளி மற்றும் சாத் பூஜா பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்பட உள்ளன. இதையொட்டி, மும்பையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இதனால் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, மத்திய ரெயில்வே 16 வெவ்வேறு வழித்தடங்களில் மொத்தம் 418 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளது. இதுகுறித்து மத்திய ரெயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மும்பை, புனே,நாக்பூர், கோலாப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக, தமிழக பயணிகளின் வசதிக்காக மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து சென் னைக்கு 12 வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரெயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளுடன் இயக் கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவுகள் இன்று காலை முதல் தொடங்கின.

இதைத்தவிர மும்பையில் இருந்து கோரக்பூர், காலாபூர்கி, லாத்தூர், காஜிபூர், பெங்களூரூ, மட்காவ், நாக்பூர், திருவனந்தபுரம், அமராவதி போன்ற நகரங்களுக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு ரெயில்வே இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT