சென்னை,
ரெயில்களில் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதன்படி, திருவனந்தபுரம் வடக்கு-மங்களூரு, திருவனந்தபுரம் வடக்கு-தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்களும், நாகர்கோவில்-சென்னை எழும்பூர் இடையே ஒரு வழி சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயிலும் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
ரெயில் எண் 06155 திருவனந்தபுரம் வடக்கு–மங்களூரு சிறப்பு ரெயில் அக்டோபர் 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு மங்களூரு சந்திப்பைச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், ரெயில் எண் 06156 மங்களூரு சந்திப்பு-திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரெயில் அக்டோபர் 21-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.15 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 11.45 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கைச் சென்றடையும்.
இந்த ரெயில்களில் 2 இரண்டடுக்கு ஏ.சி. பெட்டிகள், 2 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 3 மூன்றடுக்கு ஏ.சி. எகனாமி பெட்டிகள், 6 படுக்கை வசதி பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற 2-ம் வகுப்பு பெட்டி மற்றும் சரக்கு-பிரேக் வேன் ஆகியவை இடம்பெறும்.
ரெயில் எண் 06164 திருவனந்தபுரம் வடக்கு-தாம்பரம் சிறப்பு ரெயில் அக்டோபர் 20-ந்தேதி இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு தாம்பரத்தைச் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், ரெயில் எண் 06163 தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரெயில் அக்டோபர் 21-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கைச் சென்றடையும்.
இந்த ரெயிலில் 16 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 2 படுக்கை வசதி பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற 2-ம் வகுப்பு பெட்டி மற்றும் சரக்கு-பிரேக் வேன் ஆகியவை இடம்பெறும்.
ரெயில் எண் 06144 நாகர்கோவில்-சென்னை எழும்பூர் ஒருவழி சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் அக்டோபர் 20-ந்தேதி இரவு 9 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9.55 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.
இந்த ரெயிலில் 2 இரண்டடுக்கு ஏ.சி. பெட்டிகள், 6 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 9 படுக்கை வசதி பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் மற்றும் 2 சரக்கு-பிரேக் வேன்கள் இடம்பெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.