சென்னை,
கோடை விடுமுறையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், தெற்கு ரெயில்வே சார்பில் திருவனந்தபுரம் வடக்கு – போத்தனூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, ரெயில் எண் 06079 திருவனந்தபுரம் வடக்கு – போத்தனூர் விரைவு சிறப்பு ரெயில், ஜூன் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) பிற்பகல் 1.00 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.45 மணிக்கு போத்தனூரை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், ரெயில் எண் 06080 போத்தனூர் – திருவனந்தபுரம் மத்திய விரைவு சிறப்பு ரெயில், ஜூன் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) மாலை 5.00 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தை சென்றடையும்.
இந்த சிறப்பு ரெயில் வர்கலா, கொல்லம், கொட்டாரக்கரை, புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேற்கண்ட சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு ஜூன் 1 ஆம் தேதி காலை 8.00 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.