தமிழக செய்திகள்

சென்னையில் இருந்து டெல்லி நிஜாமுதீனுக்கு சிறப்பு ரெயில்கள்

தாம்பரத்தில் இருந்து டெல்லி நிஜாமுதீனுக்கு செல்லும் சிறப்பு ரெயிலுக்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

சென்னை,

சென்னை எழும்பூர், தாம்பரத்தில் இருந்து டெல்லி நிஜாமுதீனுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

தாம்பரம் - நிஜாமுதீன்

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தாம்பரத்தில் இருந்து நாளை (அக்.9) இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06141) 4-வது நாள் அதிகாலை 3 மணிக்கு டெல்லி நிஜாமுதீனை சென்றடைகிறது.

20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் சென்னை எழும்பூர் வழியாக செல்லும்.

சென்னை எழும்பூர் - நிஜாமுதீன்

இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து நாளை மறுநாள் (அக்.10) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06143) 4-வது நாள் அதிகாலை 3 மணிக்கு டெல்லி நிஜாமுதீனை சென்றடையும்.

இதில், தாம்பரத்தில் இருந்து டெல்லி நிஜாமுதீனுக்கு செல்லும் சிறப்பு ரெயிலுக்கு (06141) டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. சென்னை எழும்பூரில் இருந்து டெல்லி நிஜாமுதீனுக்கு செல்லும் சிறப்பு ரெயிலுக்கு (06143) டிக்கெட் முன்பதிவு நாளை (அக்.9) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT