சென்னை,
தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து திருச்சிராப்பள்ளி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07615) வருகிற பிப்ரவரி 3, 10, 17 மற்றும் 24 ஆகிய தேதிகளில் செவ்வாய்க்கிழமைகளில் சார்லபள்ளியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மாலை 6.45 மணிக்கு திருச்சிராப்பள்ளி சென்றடையும்.
மறுமார்க்கத்தில், திருச்சிராப்பள்ளியில் இருந்து சார்லபள்ளி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 07616) வருகிற பிப்ரவரி 4, 11, 18 மற்றும் 25 ஆகிய தேதிகளில் புதன்கிழமைகளில் திருச்சிராப்பள்ளியில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் இரவு 9.30 மணிக்கு சார்லபள்ளி வந்து சேரும்.
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது.