சென்னை,
மகா சிவராத்திரியையொட்டி தென்னக ரெயில்வே சார்பில் பக்தர்களின் வசதிக்காக சென்னை, காட்பாடி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் பெரம்பூர், அம்பத்தூர், திரு > வள்ளூர், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா ரோடு, காட்பாடி வழியாக திருவண்ணாமலையை மதியம் 3 மணிக்கு வந்தடைகிறது. தொடர்ந்து அந்த ரெயில் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு அதே வழியாக காலை 9.15 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது.
அதேபோல் மற்றொரு சிறப்பு ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு ஜங்ஷன், மேல்மருவத்தூர், விழுப்புரம் வழியாக மாலை 4 மணிக்கு திருவண்ணாமலையை வருகிறது. பின்னர் அந்த ரெயில் அங்கி ருந்து புறப்பட்டு வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையம் செல்கிறது.
தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு திருவண் ணாமலை ரெயில் நிலையத்திற்கு காலை 5 மணிக்கு வருகிறது. பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து 5.05 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக காலை 9.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.
இதேபோல் இன்று காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப் படும் ரெயில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை பகல் 11.45 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் இந்த ரெயில் மதியம் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு விழுப்புரத்தை மதியம் 2.15 மணிக்கு சென்றடைகிறது.
அதேபோல் இன்று இரவு 10.40 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப் படும் சிறப்பு ரெயில் நள்ளிரவு 12.10 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறது. பின்னர் அந்த ரெயில் 12.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1.45 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.
நாளை அதிகாலை 2.05 மணிக்கு வேலூர் கண் டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் அதிகாலை 3.20 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறது. பின்னர் இங்கிருந்து 3.25 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் ஜங்ஷனை சென்றடைகிறது.
அதேபோல் இன்று காலை 9.15 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் காலை 10.45 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறது. பின்னர் அந்த ரெயில் 10.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதி யம் 1.05 மணிக்கு காட்பாடியை சென்றடைகிறது.
பின்னர் அந்த ரெயில் மதியம் 1.20 மணிக்கு காட்பாடி ஜங்ஷனில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு மதியம் 3.28 மணிக்கு வருகிறது. தொடர்ந்து அந்த ரெயில் மதியம் 3.33 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் ஜங்ஷனை சென்றடைகிறது. இதேபோல் இந்த ரெயில் நாளையும் இயக்கப்பட உள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.