புதுடெல்லி,
குழந்தை தொழிலாளர்கள் சட்டத்தை முறையாக செயல்படுத்துவதை கண்காணிக்க சிறப்பு பிரிவை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு திருத்தப்பட்ட குழந்தை தொழிலாளர்கள், பதின் பருவத்தினர் சட்டத்தை கண்காணிக்கவும், அதன் விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் சிறப்பு பிரிவை உருவாக்குமாறு மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த சட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்துவதை உறுதி செய்ய மாநிலங்களின் முதன்மை செயலாளர்கள் வாயிலாக அமலாக்க முகமைகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.