தமிழக செய்திகள்

சென்னையில் 4,079 வாக்குச்சாவடிகளில் அக்.10, 11-ல் வாக்காளர் சிறப்பு முகாம்..!

முதல் முறை வாக்காளர்களை பதிவு செய்வதற்காக, சென்னையில் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

சென்னை,

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யவுள்ள இளம் / முதல் முறை வாக்காளர்களை பதிவு செய்வதற்கான வசதியாக, 10.10.2026 (சனிக்கிழமை) மற்றும் 11.10.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

வாக்காளர் சிறப்பு முகாம்

இது தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யவுள்ள இளம் / முதல் முறை வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் எதிர்வரும் 10.10.2026 (சனிக்கிழமை) மற்றும் 11.10.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சென்னை தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள அனைத்து 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது.

எனவே, வாக்காளர் பட்டியலில், இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யவுள்ள இளம் / முதல் முறை தகுதி பெறும் வாக்காளர்கள், உரிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமினை அணுகி, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT