சென்னை,
தமிழகத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்ட விமான சேவைகளை, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முழுவதுமாக நிறுத்தியுள்ளது. இந்திய விமான போக்குவரத்து துறையில் குறைந்த கட்டண விமான சேவையாக அறிமுகமான ஸ்பைஸ்ஜெட், 2005 ஆம் ஆண்டு மே மாதம் தனது அகில இந்திய சேவையை தொடங்கிய சில மாதங்களிலேயே சென்னை சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும் உள்நாட்டு சேவைகளை தொடங்கியது.
ஸ்பைஸ்ஜெட் தனது முதல் சர்வதேச விமான சேவைகளில் ஒன்றை அக்டோபர் 2010-ல் சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பு வழித்தடத்தில் வெற்றிகரமாக தொடங்கியது. பிற நகரங்களின் இணைப்பு (2011 - 2025): சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களான மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கும், பின்னர் மார்ச் 2025-ல் தூத்துக்குடிக்கும் ஸ்பைஸ்ஜெட் தனது விமான சேவைகளை விரிவுபடுத்தி இயக்கி வந்தது.
தமிழகத்தில் இருந்து சர்வதேச விமான சேவைகளை ஸ்பைஸ்ஜெட் இயக்கி வந்தது. கடந்த பிப்., 28ம் தேதி முதல் மதுரையில் இருந்து துபாய்க்கு நேரடியாக இயக்கிய விமானமும், போர் பதற்றம் காரணமாக, நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சரியான நிலையில், மற்ற விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்குகின்றன. ஆனால், ஸ்பைஸ்ஜெட் மட்டும் தனது விமான சேவையை வழங்கவில்லை.
ஸ்பைஸ்ஜெட் மட்டும் தனது விமான சேவையை வழங்கவில்லை. சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி விமான நிலையங்களில் இருந்து, நாட்டின் பிற மாநிலத்தின் சில முக்கிய நகரங்களுக்கு தினசரி விமான சேவைகளை, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மதுரை மற்றும் கோவையில் இருந்து நாட்டின் பிற நகரங்களுக்கான சேவைகள் படிப்படியாக குறைத்து வந்தது. சென்னையில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிவமொவுக்கு மட்டுமே தனது தினசரி விமானங்களை இயக்கி வந்தது. தமிழகத்தில் இருந்து விமானம் சேவையை, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முழுவதும் நிறுத்தியுள்ளது. விமான சேவையை விரும்பி மக்கள் ஆதிக அளவில் பயண்படுத்தியும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்த வழிதடங்களில் தொடர்ந்து இயக்க விருப்பம் காட்டவில்லை என தெரிகிறது.