தமிழக செய்திகள்

தொற்று நோய் பரவல்: சுகாதாரத்தை மேம்படுத்த அரசுக்கு வணிகர்கள் ஒத்துழைக்க வேண்டும் - விக்கிரமராஜா வேண்டுகோள்

வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விளம்பர பதாகைகளை கடைகளில் வைக்க வேண்டும் என விக்கிரமராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தமிழகத்தில் தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பரவலாக டெங்கு காய்ச்சல், டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற கொசு மற்றும் நீர்த் தொற்று நோய்கள் வேகமாக பரவுவதாக தெரியவருகிறது.

பொறுப்புமிக்க குடிமக்களாக அரசுக்கு உதவும் வணிகர்களாக கழிவுநீர் தேங்கிடாமல், குப்பைகளை அகற்றி அரசுக்கும், மாநகராட்சிக்கும் உரிய ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விளம்பர பதாகைகளை தங்களின் கடைகளில் வைத்து தமிழகத்தின் சுத்தம், சுகாதாரத்தையும், நோயற்ற வாழ்வையும் உறுதி செய்திட வேண்டும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT