ராமேசுவரம்,
காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் குறைந்த நிலையில் ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து 4 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் மீன்பிடித்தபோது அங்கு 3 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் தனுஷ்கோடி, பாம்பன் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்துவிட்டு நேற்று காலை கரை திரும்பினர்.