திருச்சி,
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக இந்த கோவில் திகழ்கிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இன்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூ. 94 லட்சத்து 5ஆயிரத்து 851 ரொக்கமும், 107 கிராம் தங்கமும், 845 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 406-ம் இருந்தது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர்.