சென்னை,
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை கல்வியாண்டின் இடையில் வெளியிடப்பட்டு வருகிறது.
அதாவது பெரும்பாலும் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டில் (2025) தாமதமாக நவம்பர் மாதம் 4-ந்தேதி வெளியானது. அதற்கு முந்தைய ஆண்டில் (2024) அக்டோபர் 14-ந்தேதி வெளியிடப்பட்டு இருந்தது.
கடந்த கல்வியாண்டுக்கான தேர்வுகள் சட்டசபை பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு தேர்வு முன்கூட்டியே அட்டவணை வெளியிட்டு, நடத்தியும் முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பில் மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் 2027 மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 (அரியர்), பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள் அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிட இருக்கிறார்.
இன்று தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டவுடன், பாடவாரியான தேர்வு தேதிகள் மற்றும் செய்முறைத் தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அரசுத் தேர்வுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.