தஞ்சை,
தஞ்சையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பேசியதாவது:-
தஞ்சை மண் பொன் விளைகிற பூமி. காவிரி விவகாரத்தில் அற்புதமான தீர்ப்பை பெற்றுத்தந்தது அதிமுக அரசு. காவிரி பிரச்சினைக்காக 37 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கிய கட்சி அதிமுக. தஞ்சை ஸ்மார்ட் சிட்டியானத்திற்கு ஜெயலலிதாவே காரணம்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்து மத்தியில் இடம்பெற்ற கட்சி தான் திமுக. திமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சி இல்லையா? அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சி ஆகிவிடுமா? எங்கள் கூட்டணி இயற்கையான கூட்டணி.
15 ஆண்டுகள் மத்தியில் அதிகாரத்தில் இருந்து தஞ்சைக்கு என்ன திட்டம் கொண்டு வந்தது திமுக? டெல்டாவில் ஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின். மத்திய ஆட்சியில் பங்கு வகித்தபோதும் காவிரி பிரச்சினையை திமுக கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளின் நிலங்களை காப்பாற்றித் தந்தது அதிமுக அரசு. ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது கூட திமுகவால் தமிழகத்திற்கு நிதி பெற முடியவில்லை.
மத்திய அரசோடு இணக்கமாக இருந்தால்தான் தமிழ்நாடு வளர்ச்சி அடையும்.நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.11,600 கோடி ஒதுக்கியது.
விவசாயிகள் அவதிப்படும்போது எங்கே போனார் டெல்டாக்காரர் ஸ்டாலின்?
ஸ்டாலின் டெல்டாகாரர் அல்ல..உல்டாகாரர். கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் சாலை அமைத்து ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
முறையாக கொள்முதல் செய்யாததால் மழையால் நெல் பாதிக்கப்பட்டது.பாதிக்கப்பட்ட நெல்லினை கூட ஸ்டாலின் நேரடியாக பார்க்கவில்லை.
திகார் சிறையில் இருந்தவர்களுக்கு என்னை பற்றி பேச தகுதியில்லை. காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக. ரூ.1,74,000 கோடி 2ஜி அலைக்கற்றை ஊழல். திரவம், சாக்லேட் என பல வடிவங்களில் கஞ்சா தமிழகத்தில் நடமாடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.