தமிழக செய்திகள்

மாநில அளவிலான சிலம்ப போட்டி

மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.

மாநில அளவிலான ஓபன் சிலம்ப போட்டி திருச்சி, உறையூரில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் திருச்சி, கடலூர், திருப்பூர், சென்னை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

போட்டிகளை சிலம்ப ஆசான் குமரேசன் தொடங்கி வைத்தார். தனித்திறன் அடிப்படையில் போட்டிகள் நடந்தன. போட்டிகளின் முடிவில் அதிக பதக்கங்களை வென்று திருச்சி, பொன்மலை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை திருவள்ளூர் மாவட்ட அணி பெற்றது. வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT