ஏசுகிறிஸ்து  
தமிழக செய்திகள்

தூத்துக்குடி சின்னக்கோவிலில் மின்னல் தாக்கி ஏசுகிறிஸ்து சொரூபம் சேதம்

தூத்துக்குடி சின்னக்கோவிலில் மின்னல் தாக்கியதில் சேதம் அடைந்த ஏசுகிறிஸ்துவின் சொரூபம் நேற்று ராட்சத கிரேன் மூலம் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டது. சொரூபத்தை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சின்னக்கோவில்

தூத்துக்குடியில் பழமையான சின்னக்கோவில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயம் அமைந்து உள்ளது. இந்த ஆலய வளாகத்தில் பிஷப் இல்லம் அமைந்து உள்ளது. இந்த ஆலயத்தில் எப்போதும் மக்கள் அதிக அளவில் வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். இந்த ஆலயத்தின் முன்பகுதியில் உள்ள கோபு ரத்தின் உச்சியில் ஏசுகிறிஸ்துவின் சொரூபம் அமைந்து உள்ளது. நேற்று முன்தி னம் மாலை 4 மணி அளவில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

கீழே விழும் நிலை

அப்போது, திடீரென பலத்த சத்தத்துடன் இடி இடித்தது. அப்போது ஏற்பட்ட மின்னல் ஏசுகிறிஸ்து சொரூபத்தின் மீது தாக்கி உள்ளது. இதில் சொரூபத்தின் இடது கை சேதம் அடைந்தது. அதே போன்று சொரூபம் அமைக்கப்பட்டு இருந்த அடிப்பாகமும் பெருமளவு சேதம் அடைந்து உள்ளது. இதனால் சொரூபம் கீழே விழும் நிலை ஏற்பட்டது.

அகற்றம்

இதனை தொடர்ந்து பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்லாமல் தவிர்க்கும் வகையில் சின்னக்கோவில் ஆலயத்தின் முகப்பு வாசல்கள் மூடப்பட்டன. தொடர்ந்து சேதம் அடைந்த சொரூபத்தை சீரமைப்பதற்கான பணிகள் நேற்று மேற்கொள்ளப் பட்டன. அதன்படி ராட்சத கிரேன் மூலம் கோபுர உச்சியில் இருந்த ஏசுவின் சொரூபம் பாதுகாப்பாக அகற்றி கீழே இறக்கப்பட்டது. தொடர்ந்து அதனை சீர மைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT