தமிழக செய்திகள்

எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை; மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்

சென்னை கன்னிமாரா பொது நூலகம், எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை நிறுவப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 3.4.2025 அன்று சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் சென்னையில் கார்ல் மார்க்ஸ்சுக்கு புதிதாக உருவச் சிலை நிறுவப்படும் என அறிவித்தார்.

அதன்படி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் சென்னை கன்னிமாரா பொது நூலகம், எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் உருவ சிலையை 6-ந்தேதி (இன்று) காலை 10 மணியளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.