தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் சாலைப்புதூர் கிராமத்தை சேர்ந்த தினகர் என்ற இளைஞர், தனது வீட்டின் அருகே உள்ள 55 அடி உயர பனை மரத்தில் 60 ஆயிரம் ரூபாய் செலவில் இரும்பு படிக்கட்டு அமைத்துள்ளார். பல தலைமுறைகளாக பனைத் தொழில் செய்து வரும் குடும்பத்தை சேர்ந்த அவர், வயது முதிர்ந்த தனது தந்தை, பாதுகாப்புடன் தொழில் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார்.
இரும்பு கம்பியால் வளைவு வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த படிக்கட்டு வழியாக பனை மரத்தின் உச்சிக்கு சென்று பதநீர் இறக்க முடியும். பனைத் தொழிலை பாதுகாக்கும் நோக்கில் இளைஞரின் இந்த புதிய முயற்சி அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது