சென்னை,
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களிலேயே பிரசாத பொருட் களை தயாரிக்கும் வகையில் சீரான சட்ட விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளி நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்படும் முறைக்கு முழுக்கு போடப்பட்டுள்ளது.
இதன்மூலம் 50 கிராம் லட்டுக்கு தயாரிப்பு செலவு ரூ.13 எனவும், விற்பனை விலை ரூ.20 என வும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், முறுக்கு, மிளகு வடை, அதிரசம், புளியோதரை, சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம், அப்பம், தேன்திணைமாவு உள்ளிட்ட பிரசாதங்களுக்கும் தயாரிப்பு மற்றும் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறிய கோவில்களில் இந்த தொகுதி அளவுகளை நிர்வகிப்பது மற்றும் சமையலறை கட்ட மைப்பு பராமரிப்பு குறித்து உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரசாதங்களில் தரம் மாறாமல் இருக்க ஆவின் நெய் மற்றும் கூட்டுறவு அங்காடிகளின் பொருட்களையே பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரசாத பாக்கெட்டுகளில் கோவில் முகவரி, பொருளின் தரம், எடை, விலை, தயாரிப்பு தேதி குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. பிரசாத செலவு விவரங்களை முறையாக தயார் செய்து அற நிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.