திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, திம்மராஜபுரத்தை சேர்ந்த தங்கையா மகன் சார்லஸ் (வயது 58) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜமணாளன் மகன் ஆகாஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
அதன் காரணமாக திம்மராஜபுரம், சங்சீதாநகர், 2 வது தெருவில் வைத்து ஆகாஷ் 17.2.2026 அன்று, சார்லசை புல்லட் மோட்டார் சைக்கிளால் வேண்டுமென்றே இடித்து மிரட்டி, கல்லால் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து சார்லஸ் கொடுத்த புகாரின் பேரில் ஆகாஷ், ஆகாஷின் தாத்தா தங்கவேல் மற்றும் பாட்டி பேச்சியம்மாள் ஆகிய 3 பேர் மீதும், மேலும் இந்த வழக்கிற்கு எதிராக ஆகாஷின் அம்மா சுமதி கொடுத்த புகாரின் பேரில் சார்லஸ் மீதும் என இருவரும் ஒருவருக்கொருவர் மாறிமாறி கொடுத்த புகாரில் 4 பேர் மீது பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.