தமிழக செய்திகள்

7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

தமிழகம், புதுவை உட்பட 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

சென்னை,

அர்னாப் புயல்

மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அர்னாப் புயல் மையம் கொண்டுள்ளது. மிக தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள அர்னாப், வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரப்பிரதேசம் மற்றும் ஏனாம் (Yanam) கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா (Bapatla) மற்றும் விசாகப்பட்டினம் (Visakhapatnam) இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு

இந்த புயலால் தமிழகத்தில் நேரடி பாதிப்பு எதுவும் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், புயலின் தீவிரத்தை குறிக்கும் வகையில் தமிழகம், புதுவை உட்பட 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. அதாவது, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT